"திருடன் போலீஸ்', "உள்குத்து' படங்களின் இயக்குநர் கார்த்திக் ராஜு தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார். ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ் தங்களது முதல் திரைப்படமாகத் தயாரிக்கவுள்ள இப்படம் மர்மங்கள் நிறைந்த திரில்லர் திரைப்படமாகத் தயாராகிறது. ரெஜினா கஸண்ட்ரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகிறது.
தயாரிப்பாளர் ராஜ்சேகர் வர்மா, என்ன சொல்றாருன்னா...
""ஒரு தயாரிப்பாளராக இல்லாமல் பார்வையாளனாகவே இயக்குநர் கார்த்திக் ராஜு சொன்ன கதை, என்னை மிகவும் ஈர்த்தது. எவரும் கேள்விப்பட்டிராத தளத்தில், வித்தியாசமான பாணியில், பல இடங்களில் ஆச்சர்யப்படுத்தும்விதமாக கதை இருந்தது. சமீபகாலமாகப் பெண் பாத்திரங்களை மையமாகக்கொண்டு, நல்ல அழுத்தமான கதையம்சம் கொண்ட படங்கள் தமிழ் சினிமாவில் ஜெயித்து வருகின்றன. அந்த வகையில் எங்களது முதல் தயாரிப்பாக பெண் கதாபாத்திரத்தை மையமாகக்கொண்ட திரில்லர் படத்தைத் தயாரிப்பது பெரும் மகிழ்ச்சி. ரெஜினா கஸண்ட்ராவுக்கும் கதைப் பிடித்து ஆவலு டன் நடிக்க ஒப்புக்கொண்டார். ரசிகர்கள் அவரைப் பெரிதும் ரசிப்பார்கள். தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங் களாகத் தேர்ந்தெடுத்து, ரசிகர்களைக் கவர்ந்துவரும் அவர் இப்படத்தி லும் தன் திறமையை நிரூபிப்பார். கதாபாத்திரத்தின்மீது அவர் காட்டும் ஈடுபாடும், அதற்கு அவர் செய்துகொள்ளும் முன்தயாரிப்பு களும் திரைப்படத்தின்மீதான அவரது காதலை, அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. படத்தின் டைட்டிலை விரைவில் வெளியிடுவோம்'' என்றார்.